Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
2018-ல் நடைபெற்ற பேரழிவுகள்
2018ம் ஆண்டு பல நல்ல நிகழ்வுகளை நாம் கடந்து வந்தாலும், இக்காலத்தில் அனுபவித்த துன்பங்கள், பேரழிவுகள் மனதை விட்டு என்றும் அகலாதவை.
உலகளவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற பேரழிவுகள்
இந்தோனீஷிய நிலநடுக்கம்
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி இந்தோனீசியாவின் பாலு பகுதியில் அமைந்துள்ள பலரோவா நகரில் கடும் நிலநடுக்கம் தாக்கியது.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் லம்போக் பகுதியில் 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 550 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள வெள்ளம்
இந்தியாவின் தென் பகுதியிலுளள கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 480 பேர் உயிரிழந்தனர்.
புயல் காற்றுடன் 771 மில்லிமீட்டர் மழை பெய்ததும் பதிவாகியது.
பெருமளவு நஷ்டம் மாநில அரசுக்கு ஏற்பட்டது. 46 ஆயிரம் ஏக்கர் நிலத்திலுள்ள பயிர்கள் சேதமாகின. 3000 மறுவாழ்வு கூடாரங்கள் அமைக்கப்பட்டன. 11 ஆயிரம் வீடுகள் சேதமாகின.
கஜ புயல்
நவம்பர் மாதம் வங்கக்கடலின் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு கஜ புயல் உருவானது.
அதன் காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
88 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்தன. 56,942 குடிசை வீடுகளும் 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
பபுவா நியூ கினி நிலநடுக்கம்
இந்தோனீசியாவை அடுத்துள்ள பபுவா நியூ கினி தீவுகளில் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம். 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது இத்தீவுகளில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம். எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை சேதம் அடைந்தது.
160 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். நிலச்சரிவில் பல ஏக்கர் தரிசு நிலங்கள் பாதிக்கப்பட்டன.
எரிமலை வெடிப்பால் சுனாமி
டிசம்பர் 23ம் தேதி அனாக் எரிமலை வெடிப்பால் இந்தோனீஷியாலில் சுனாமி ஏற்பட்டு 429 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது.
எரிமலை வெடிப்பால் சுனாமி ஆழிப்போரலை ஏற்படுவது இதுவே முதல்முறையாக கருதப்படுகிறது.
கடலில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அல்ல, எரிமலை வெடிப்பாலும் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்பதை உலகிற்கு அறிவிக்கும் பேரழிவாக இது அமைந்து விட்டது.
Add new comment