வெனிசுவேலாவில் மிதமான நிலநடுக்கம்


வெனிசுவேலாவில் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

வெனிசுலாவிலுள்ள சான் டியாகோ நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கேரபோவா பகுதியில் வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி 29 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 6 நொடிகள் நீடித்ததாகவும், அதனால் வீடுகள் குலுங்கியதாகவும் நேரில் உணர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி பாதிப்புகளின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

 

பெரும் பொருளாதார நெருக்கடியால் வெனிசுவோலா துன்புறும் நிலையில், இந்த நிலநடுக்கமும் பாதித்துள்ளது.

 

அன்றாட தேவைகளுக்கு அவதிப்படும் மக்கள் தற்போது அருகிலுள்ள நாடுகளில் தஞ்சம்புகுவதற்கு செல்வதாக அங்கிரந்து வருகின்ற தகவல்கள் அறிவிக்கின்றன.

Add new comment

5 + 5 =