Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
14ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழிப் பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் உலகம் முழுவதும் 26ம் தேி கடைபிடிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி அதிகாலை சுமார் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாய்ந்தன.
ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை இது பதிவான நிலையில் உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவில் நிலநடுக்கம் பதிவானதில்லை என்று ஆய்வாளா்கள் தொிவித்தனா்.
கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிலம் பெயா்ந்து அதிவேகமாக கடல் நீரைத் தள்ளியது. இதுவே ஆழிப்பேரலையாக உருவாகி கடற்கரையை நோக்கி எழத் தொடங்கியது.
சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் போ் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் சென்னை, கடலூா், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயரிிழந்தனா்
இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் இறந்துவிட்டனர். .
14 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தோனேசியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஆழிப்பேரலைகள் இந்திய கடலோரப் பகுதிகளை வந்தடைய 3 மணி நேரம் ஆனது.
தற்போது உள்ள நவீன கருவிகள் அப்போது செயல்பாட்டில் இருந்திருந்தால் லட்சக்கணக்கான சொந்த பந்தங்களை இழந்து அனாதையாக நின்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
Add new comment