இந்தியாவில் ஐ.எஸ் ஆதரவு குழு தீட்டடிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு


இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பெரியதொரு திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவம் தெரிவித்து்ள்ளது.

 

ஐ.எஸ். ஆதரவு பெற்ற ஒரு குழு தீட்டிவந்த திட்டத்தை முடிறியடித்துள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தலைநகர் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 17 இடங்களில் நடத்திய சோதனைகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தற்கொலைத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதாகவும், வெடிகுண்டு தாயரித்து வந்ததாகவும் தேசியப் புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

டெல்லியில் ஐந்து பேரும், உத்தர பிரதேச மாநிலத்தில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைதானோர் ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் தொடர்புகளோடு செயல்பட்டு வந்ததாகவும் டெல்லியில் தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Add new comment

13 + 2 =