அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி


அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

 

அணு ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கும் அதிநவீன ஹைப்பர் சானிக் ஏவுகணையின் சோதனைகள் வெற்றி அடைந்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

 

தற்போது இருக்கின்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கண்டுபிடித்து அழித்துவிட இயலாத அளவுக்கு இது நவீனமாக உள்ளது என்கிறது ரஷ்யா.

 

இத்தகைய புதுவித போர் தந்திர முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா என்று அதிபர் புதின் குறிப்பிட்டு்ளளார்.

 

அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இது, அடுத்த ஆண்டு ராணுவ சேவையில் இணைக்கப்படும் என்று தெரிய வருகிறது.

 

ஒலி வேகத்தில் 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் படைத்தது.

Add new comment

5 + 0 =