இந்தோனீஷியாவில் சுனாமி – உயிரிழப்பு 429-ஆக அதிகரிப்பு


இந்தோனீஷியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.

 

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் உள்ள சைல்டு எரிமலை கடந்த 23-ம் தேதி இரவு வெடித்துச் சிதறியது.

 

இதன் காரணமாக மேற்கு ஜாவா, தெற்கு சுமத்ரா தீவுப் பகுதிகளின் கடற்கரையில் சனாமி பேரலைகள் எழுந்தன.

 

அதில் பல சிக்கிய நிலையில், ராணுவம், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமிக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

 

காயமடைந்த சுமார் 1,400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 128 பேரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Add new comment

2 + 3 =