வத்திக்கான் மற்றும் பெத்லேகேமில் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்


வத்திக்கான் மற்றும் பெத்லேகம் உட்பட உலக நாடுகள் முழுவதும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விkமரிசையாக கொண்டாடப்பட்டது.

 

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு, இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் சுமார் பத்தாயிரம் பேர் குவிந்தனர்.

 

அங்கிருக்கும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

 

கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடமான வாத்திக்கான் தேவாலயத்திலும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்து பிறப்பு பெருவிழா வழிபாடுகள் நடைபெற்றன.

 

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் நடந்த திருவழிபாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

 

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் முழுவதும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

Add new comment

7 + 2 =