வத்திக்கானின் உதவியை நாடும் தாய்லாந்திலுள்ள பாகிஸ்தான் கத்தோலிக்க அகதிகள்


அகதிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்துள்ள தாய்லாந்து அரசிடம் இருந்து தங்களை காப்பாற்ற கத்தோலிக்க அகதிகள் வத்திக்கானின் உதவியை கோரியுள்ளனர்.

 

ஒரு வாரத்திற்கு முன்பு வரை 9 மாதங்கள் ஆன அகதிகள் அனைவரும் தாய்லாந்தில் சுதத்திரமாக நடமாட அனுமதி இருந்து வந்தது.

 

ஆனால், தற்போது இந்த நிலை மாறி, அகதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தாய்லாந்து அரசு முடிக்கிவிட்டுள்ளது.

 

“எக்ஸ்ரே அவுட்லா ஃபாரினஸ்” என்கிற நடவடிக்கை மூலம் 2,200-க்கு மேலானோரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கிறிஸ்தவ தஞ்சம்கோரிகளும் அடங்குகின்றனர்.

 

புதிதாக கைது செய்யப்பட்ட 70 பாகிஸ்தான் கிறிஸ்தவர்களும், அகமதி முஸ்லிம்களும் பாங்காக்கில் விசா நாட்களுக்கு அதிகமாக தங்கியிருந்ததற்காகவும், நாட்டில் சட்டபூர்வமற்ற முயைலி நுழைந்ததற்காகவும் கடந்த வாரம் தண்டனை பெற்றுள்ளனர்.

 

இவர்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டால், தங்களின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகும் என்று அஞ்சுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முன்பு கைது செய்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவருக்கும் பிணை வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

தங்களின் வாழ்க்கையை காப்பாற்ற வத்திக்கான் தலையிட வேண்டுமென இந்த பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் வைத்து்ளளனர்.   

Add new comment

1 + 2 =