சீனாவிலுள்ள தேவாலங்களில் சிலுவைகள் அகற்றம்


சீனாவிலுள்ள 3 மறைமாவட்டங்களில் தேவாலய சிலுவைகளையும், சில தேவாலய கட்டுமானங்களையும் இடித்துவிடுவதற்கு சீன அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர்.

 

ட்ச்சியாங்கிலுள்ள மறைமாவட்டங்கள்,ஹெனான், குய்சௌ மாகாணங்களில் கிறிஸ்தவத்தின் பொதுவான அடையாளங்களை அகற்றி விடுகின்ற புதிய பரப்புரை தொடங்கியுள்ளது.

 

சீனாவின் தென் மேற்கில் அமைந்துள்ள குய்சொளவில் அன்லாங் தேவாலயத்தில் அமைந்துள்ள தேவாலய கட்டுமான அமைப்புகளையும், சிலுவைகளையும் அகற்றுவதற்கு அக்டோபர் 15ம் தேதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 

உள்ளூர் புனித யாத்திகர்களுக்காக இந்த பகுதி கட்டப்பட்டிருந்தது நகர திட்டமிடலுக்கு விரேதமானது என்று தெரிவிக்கப்பட்டது.

 

இதனை இடிக்காவிட்டால், அக்டோபர் 20ம் தேதி அபராதம் செலுத்துவதோடு, புனித யாத்திரிகர்களிடம் இருந்து பெற்ற வருவாய் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

அக்டோபர் 12ம் தேதி லுவோயாங் கத்தோலிக்க தேவாலயத்திலுள்ள இரண்டு சிலுவைகள் நள்ளிரவு 2 மணிக்கு அதிகாரிகளால் அகற்றப்பட்டன.

 

எதிர்ப்பின் அடையாளமாக இவ்வாறு சிலுவைகள் அகற்றப்படுவதை தடுக்க தேவாலயத்தின் பெண் உறுப்பினர் ஒருவர் கம்பு எடுத்து அதிகாரிகளின் கார்களை அடிக்கின்ற காணொளி வெகுவாக பரவலாகியது.

 

அக்டோபர் 3ம் தேதி ட்ச்சுமைதியான் மறைமாவட்டத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் ஒரு சிலுவையை கட்டாயப்படுத்தி  அகற்றியுள்ளனர்.

 

தேவாலயங்களில் இருகின்ற வெளிப்புற அடையாளங்களை அழித்து விடுவதன் அல்லது மறைத்து விடுவதன் மூலம் மக்களின் மனங்களில் இருந்து இறை நம்பிக்கையை குறைத்துவிட முடியும் என்று சீன அரசு கனவு கண்டுவருவதாக விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு்ள்ளனர்.

Add new comment

8 + 4 =