கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு


கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்களை பாதுகாக்க பாதுகாப்பு நடடிவடிக்கைகளை பாகிஸ்தான் காவல்துறை அதிகரித்திருந்தது.

 

கடந்த காலங்களில் தற்கொலை தாக்குதல்தாரிகளால் தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்ட, லாகூரிலுள்ள பஞ்சாப் நகரில் கிறிஸ்தவர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தது.

 

அதிக பதற்றமான இடங்களில் எல்லாம் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி வருவதாக கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்திலேயே காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற கேப்டன் மஸ்டேன்சிர் ஃபெரோஸ் தெரிவித்தார்.

 

மேலும், ரோந்து கண்காணிப்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பதற்றம் மிகுந்து காணப்படும் தோவாலயங்களிலும், பொழுபோக்கு பூங்காக்களிலும் பாதுகாப்பு பேரணிகளை நடத்தயிருப்பதையும் அப்போதே அவர் உறுதிப்படுத்தினார்.

 

இதன் காரணமாக முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

 

தேவாலயங்களுக்கு 100 மீட்டருக்கு அப்பால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஒவ்வொன்றுக்கம் தனித்தனி அடையாள சீட்டு வழங்கப்பட்டதாகவும் ஃபெரோஸ் கூறினார்.

 

இத்தகைய பலமான பாதுகாப்பால் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதியான கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடியுள்ளதாக கருதப்படுகிறது.

Add new comment

6 + 13 =