புயல்களின் மத்தியில் நிலைத்து நிற்க மரியாள் கற்பிக்கிறார் – திருத்தந்தை


மெக்ஸிகோவிலுள்ள டெபியாக் இடத்திலுள்ள சிறு குன்றில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏழை எளியவர்களோடு தாய் தனது குழந்தைகளை பராமரிப்பதுபோல மரியாள் இருந்துள்ளதை திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியு்ளளார்.  

 

குவாடாலுபே மரியன்னை திருநாளில் இந்த செய்தியை இறைமக்களுக்கு வழங்கி மறையுரை ஆற்றியுள்ளார்.

 

தாய்மையின் உருவாக குடும்ப வாழ்க்கையில் தனது வீட்டை மரியன்னை அமைத்துள்ளார். நாம் உருவாக்கும் பல தவறுகளை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து விடுகிறார். புயல்களின் மத்தியில் நிலைத்து நிற்பதை அவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றியபோது ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு இறைமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

மரியாள் விரைந்து சென்று எலிசபெத்தை சந்திப்பதை நற்செய்தி வாசகமான கொண்டு சிந்தனை வழங்கிய மறையுரையில் திருத்தந்தை இ்வ்வாறு தெரிவித்துள்ளார்.   

Add new comment

8 + 4 =