வரலாற்று புகழ்மிக்க தேவாலய மணியை அருங்காட்சியில் வைக்க மறுக்கும் மறைமாவட்டம்


வரலாற்று புகழ்மிக்க தேவாலய மணியொன்றை அருங்காட்சியகத்தில் வைக்க பிலிப்பீன்ஸ் அரசு திட்டமிட்டு்ளளதற்கு எதிராக அந்நாட்டு மறைமாவட்ட  தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்

 

கத்தோலிக்கர்களை வழிபாடு செய்ய அழைப்புவிடுக்கும் புனித பொருள்தான் இந்த தேவாலய மணி என்று கூறி போரோங்யா மறைமாவட்ட ஆயர் வெளியிட்ட அறிக்கையில் அரசின் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளார்.

 

1901ம் ஆண்டு பிலீப்பீன்ஸின் மத்தியிலுள்ள பலான்கிகா நகரில் போர் வெற்றியின் அடையாள கோப்பைகளாக அமெரிகக் படைப்பிரிவுகள் கொண்டு சென்ற 3 தேவாலய மணிகளை டிசம்பர் 11ம் தேதி திரும்ப வழங்கியுள்ளது.

 

அந்த மணிகளில் ஒன்றை தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க அரசிடம் வழங்க வேண்டுமென செனட் அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தலைவர் ஜூயன் மிகுவல் சுபிரி அந்நாளே வேண்டுகோள் வைத்தார்.

 

பொது மக்களுக்கு பொதுவாக இளைஞர்களுக்கு பாராட்டும், கல்வியும் அளிப்பதற்கு இந்த மணிகளில் ஒன்றை அருங்காட்சியத்தில் வைப்பதற்கு செனட் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

 

இந்த மணியால் வரலாற்று முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்து கொள்வர் என்ற அவர் கூறியுள்ளார்.

 

இந்த மணிகளில் ஒன்று தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டால், இந்த மத ரீதியான கலைப்பொருளை பல பிலிப்பின்ஸ் மக்கள் பலரும் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கும். பிலிப்பீன்ஸ் – அமெரிக்க போரின் ரத்த கறை படித்த அத்தியாயங்கள் ஒன்றில் இந்த தேவாலய மணிகளின் பங்கு பற்றியும் மக்கள் நினைவூட்டப்படுவர் என்று சுபிரி கூறியுள்ளார்.

 

இந்த மணிகள் தனியார் சொத்து. இதனை வாங்க நினைக்கும் அரசின் முன்மொழிவு வரலாற்றுக்கு அவமரியாதை என்றும், கத்தோலிக்கர்கள் மீதான உரிமை மீறல் என்று போரோங்யன் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.

Add new comment

10 + 6 =