மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத்


இந்தியாவின் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்றுள்ளார்.

 

தலைநகர் போபாலில் நடைபெற்ற எளிய விழாவில்,  கமல்நாத்துக்கு, ஆளுநர் ஆனந்தி பென் படேல், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைமையமைச்சர்களான மன்மோகன் சிங், தேவகவுடா , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

 

மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்றபின், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்கின்ற முதல் உத்தரவில் கமல்நாத் கையெழுத்திட்டார்.

Add new comment

7 + 3 =