குவாலியர் ஆயர் கார் விபத்தில் மரணம்


கார் விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்ததால், குவாலியர் ஆயர் தாமஸ் தென்னாட் காலமானார்.

 

பள்ளி ஒன்றின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின், ஆயரின் இல்லத்திற்கு திம்பிய வழியில் கார் சறுக்கி தலைகீழாக உருண்டு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து விட்டதாக குவாலியர் மறைமாவட்டம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

 

உடனடியாக புனித ஜோசப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு வைத்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

 

பல்லோட்டின் என்று அறியப்படும் கத்தோலிக்க அப்போஸ்தலிக்க சொசைட்டியின் முதல் இந்திய ஆயர் 65 வயதான ஆயர் தென்னாட் ஆவார்.

 

அவருடைய பூதவுடலுக்கு இறுதிச் சடங்கு டிசம்பர் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை குவாலியரில் மேராரிலுள்ள புனித பாவுல் தோவாலயத்தில் நடைபெறவுள்ளது.

 

இவர் 1953ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கேரளா மாநிலத்தின் கோட்டயம் உயர் மறைமாவட்டத்திலுள்ள கூடாலூரில் பிறந்தார்.

 

பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் 1969ம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள பல்லோட்டைன் இளங்குருடத்தில் சேர்ந்தார். 1978ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

 

புனே, பாப்பிறை குருமடத்தில் கற்ற அவர் மேய்ப்புப்பணி இறையியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.

 

2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி ஆயராக அறிவிக்கப்பட்டார். 2017 ஜனவரி 8ம் தேதி அவர் அயராக அர்ச்சிக்கப்பட்டார்.

 

அரும்பெரும் பணியாற்றிய இந்த ஆயரின் எதிர்பாராத இறப்பு, அந்த மாவட்ட மக்களை மிகவும் கவலையடைய செய்து்ளளது 

Add new comment

16 + 3 =