மத்திய பிரதேசத்தில் முதல்வராகிறார் கமல் நாத்


மத்தியப்பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல் நாத் 17ம் தேதி பதவி ஏற்கிறார்.

 

5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களை தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

 

மத்தியப்பிரதேசத்தில் முதல்வராகும் போட்டியில், கட்சியின் அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோரின் பெயர்கள் பிரிந்துரைக்கப்பட்டன.

 

அதில் கமல் நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Add new comment

1 + 13 =