தெலங்கானா முதல்வராக 2ம் முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்பு


தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் 2வது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றுள்ளார்.

 

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 112 தொகதிகளில் 88-யில் வெற்றி பெற்ற அவரது ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

 

தெலங்கானா சட்டமன்ற தோ்தல் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி நடைபெற்றது.

 

இதில் ஏற்கனவே ஆட்சி பொறுப்பில் இருந்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு, எதிராக காங்கிரசும், தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

 

பா.ஜ.க.வும், டி.ஆா்.எஸ். (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி) கட்சியும் தனித்து போட்டியிட்டன. இந்த மும்முனை போட்டியில் டி.ஆா்.எஸ். கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையவைிட அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

Add new comment

5 + 5 =