ஆசிய ஆயர் மாநாட்டில் 2வது நாள் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் | வேரித்தாஸ் செய்திகள்


பிலிப்பைன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCP) ஆசிய ஆயர் கூட்டமைப்பின் தற்போதைய பொது மாநாட்டில் இரண்டாவது நாளில் பிலிப்பைன்ஸிற்காக அதன் செயல்பாடுகளை மையமாகக் கொண்டு பிரார்த்தனைகளில் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஆசிய ஆயர்கள் பேரவை மாநாட்டினை முன்னின்று நடத்தும் பேரவை, பிலிபைன்ஸ் மக்களுக்கு ஜெப அழைப்பு விடுத்துள்ளது. ஏனெனில் பிலிபைன்ஸ் நாடும் அதன் மக்களும்தான் இன்றைய நிகழ்வுகளின் முக்கிய அங்கமாக இருப்பார்கள். எனவே அன்றைய நாளில் நடைபெறும் அனைத்து திருப்பலிகளிலும் மாநாடு சிறப்புற அமைய வேண்டும் என்று கடவுளிடம் மன்றாட பிலிபைன்ஸ் மக்கள் அனைவர்க்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அக்டோபர் 13 அன்று காலை வழிபாட்டினை பிலிபைன்ஸ் நாடு நடத்தியது.   கலூகன் ஆயர்  மற்றும்  (CBCP)  தலைவர் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் அன்றைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார் . அதே நேரத்தில் கொட்டாபாடோ பேராயர் ஓய்வுபெற்ற  கார்டினல் ஆர்லாண்டோ கிவெடோ நற்கருணை கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

"FABC 50: ஆசியாவின் மக்களாக இணைந்து பயணம் செய்தல்" என்ற கருப்பொருளைச் சுமந்துகொண்டு... அவர்கள் வேறு வழியில் சென்றனர்." (மத் 2:12), என்ற இறைவார்த்தையைக் கூறி தாய்லாந்தின் பான் ப்ஹு வான்-ல் உள்ள பாங்காக் உயர் மறைமாவட்டத்தின் மேய்ப்புபணி மையத்தில் 2022 அக்டோபர் 12 முதல் 30 வரை மாநாடு நடைபெறும் மேலும் மாநாட்டின் நோக்கம் "ஆசியாவில் திருச்சபையின் மீள் எழுச்சி மற்றும் எழுச்சி பெறும் யதார்த்தங்கள் மற்றும் சவால்களை பிரதிபலிப்பதாகும்." என்று கூறினார்.

திருஅவையானது   தன்னைச் சுற்றியுள்ள ஆசிய யதார்த்தத்தில் பல விதமான  சவால்களை எதிர்கொள்கிறது  அதே போல் வளர்ந்து வரும் விளம்பரமயமான  நாடுகளிலும் பல  சவால்களை எதிர்கொண்டுவருகிறது. பணிகள் ஆற்றும் திருஅவை என்பதை விட உலகம் முழுவதும் செல்லும் திருஅவை என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்று பேரவை கூறுகிறது.

FABC என்பது ஆசியாவில் உள்ள ஆயர் மாநாடுகளின் ஒரு தன்னார்வ கூட்டமைப்பு ஆகும், இது மியான்மரின் யாங்கூன் கார்டினல் சார்லஸ் போ தலைமையில் திருஅவை ஒப்புதலுடன் நிறுவப்பட்டது.

ஆசியாவில் உள்ள திருஅவை மற்றும் சமூகத்தின் நலனுக்காக அதன் உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் இணை பொறுப்பை வளர்ப்பதே கூட்டமைப்பின் நோக்கம். 

 

- அருள்பணி . வி. ஜான்சன் 

 

Add new comment

9 + 1 =