இந்தோனீஷியாவில் இளம் ஆயர் நியமனம்


வட சுமத்திராவின் மெடான் உயர் மறைமாவட்ட பேராயராக கப்பூச்சியன் மாகாணத் தலைவலும், 48 வயதான அருட்தந்தையுமான கேர்னேலியஸ் சிபாயுங்-கை திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

 

ஓய்வுபெற்றுள்ள பேராயர் அனிசிட்டஸ் போங்சு சினாகாவுக்கு பதிலாக இந்த இளம் குரு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் மிகவும் இளமையிலேயே பேராயராக நியமிக்கப்பட்டுள்ளதால், பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

 

இந்jத செய்தி மெடான் போராலயத்தில் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்டது.

 

ஓய்வுபெற்றாலும், 77 வயதான பேராயர் சினாகா, செப்டம்பரில் கப்பூச்சியன் ஆயர் லுடோவிகுஸ் மானலாங்கின் இறப்பை தொடர்ந்து அந்த ஆயரின் மறைமாவட்டமான சிபோல்காவின் பாப்பிறை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

 

பேராயராக நியமிக்கப்பட்டுள்ள சிபேயுங் 1970ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வட சுமத்திரா மாகாணத்தில் பிறந்தார்.

 

இறையியல் பயின்ற பின்னர் 1999ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

 

2002ம் ஆண்டு ரோமிலுள்ள கிரகோரியார் பல்கலைக்கழகத்தில் சித்தாந்த இறையியல் பயின்றார்.

 

2015ம் ஆண்டு கப்பூச்சியன் மாகாண தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2021ம் ஆண்டு வரை தலைவராக செயல்பட மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  

Add new comment

8 + 6 =