
1. இறை இரக்கப் பக்தி உலகில் பரவக் காரணமான புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா
புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள் வழியாக கடவுள் தம் இரக்கத்தில் மீட்பைத் தேடும் வழிகளை உலகிற்குக் காட்டியுள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 4 அன்று தனது இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கூறினார்.
இறை இரக்கப் பக்தி உலகில் பரவக் காரணமான புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும், இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்ற இவர், போலந்து நாட்டின் Głogowiecவில் 1905ஆம் ஆண்டு பிறந்து 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கிராக்கோவ் நகரில் தனது 33வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.
மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அக்டோபர் 4, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் இறை அர்ப்பணம், மக்கள் சேவை, படைப்போடு கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை நம் வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைப்போம் என்று திருத்தந்தை கூறினார். - வத்திக்கான் செய்திகள்
Add new comment