Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 07.10.2022


1. இறை இரக்கப் பக்தி உலகில் பரவக் காரணமான புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 

புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள் வழியாக கடவுள் தம் இரக்கத்தில் மீட்பைத் தேடும் வழிகளை உலகிற்குக் காட்டியுள்ளார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அக்டோபர் 4 அன்று தனது இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கூறினார்.

இறை இரக்கப் பக்தி உலகில் பரவக் காரணமான புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்கள், தன் வாழ்நாள் முழுவதும், இயேசுவை பல காட்சிகளில் கண்டதாகவும் அவரோடு உரையாடியதாகவும் கூறியுள்ளார். இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்ற இவர், போலந்து நாட்டின் Głogowiecவில் 1905ஆம் ஆண்டு பிறந்து 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கிராக்கோவ் நகரில் தனது 33வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, அக்டோபர் 4, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் இறை அர்ப்பணம், மக்கள் சேவை, படைப்போடு கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றை நம் வாழ்வுக்கு வழிகாட்டியாக அமைப்போம் என்று திருத்தந்தை கூறினார். - வத்திக்கான் செய்திகள் 

2. அரூர் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மான், காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை 20% உயர்வு

அரூர் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மான்கள், காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதம் வனப்பரப்பை கொண்டதாகும். தமிழகத்தில் அதிக வனப்பரப்பை கொண்ட மாவட்டங்களில் தருமபுரி 2-வது இடத்தில் உள்ளது. இதில் தாவர இனங்கள், வன விலங்குகள், பறவை இனங்கள், ஊர்வன, பூச்சிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன. இதேபோல யானை, கரடி, காட்டெருமை, எறும்பு தின்னி, மலைப்பாம்பு, நரிக்கொம்பு மான், புள்ளி மான், கழுதைப் புலி உள்ளிட்ட அரியவகை வன விலங்குகள் உள்ளன. 

அரூர் வனப்பகுதியில் அமைந்துள்ள அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி வனச்சரகங்களில் புள்ளிமான், காட்டுப்பன்றிகள், முயல்கள் என சிறு விலங்கினங்களும், மயில்கள் அதிக அளவிலும் உள்ளன. யானை, கரடி போன்றவை இப்பகுதியில் இல்லை. தெளிவாக கணக்கிட முடியாவிட்டாலும் சுமாராக கடந்த 5 ஆண்டுகளாக இந்த வனப்பகுதியில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகாித்துள்ளதாக வனத் துறையினர் தொிவித்துள்ளனர். வழக்கமாக காடுகளில் ஒரு வகையான உணவுச்சங்கிலி நிலவுவது வழக்கம். ஒவ்வொரு உயிரையும் வேட்டையாடி உண்ணும் மற்றொரு உயிாினம் வாழும். அதன்மூலம் விலங்குகளின் இனப் பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆனால், அரூர் பகுதிகளில் மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடக் கூடிய பொிய விலங்கினங்கள் இல்லை என்பதால் சமீப காலத்தில் இவற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இது தவிர வனப்பகுதியில் உணவிற்காக மான் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதும் வனத்துறையினாின் தீவிர கண்காணிப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

3. 10லட்சம்  மரங்கள் இயக்கத்தின் ஓர் பகுதியாக சிங்கப்பூர் கத்தோலிக்கர்கள்  மரங்களை நட்டனர்.

சிங்கப்பூர் கத்தோலிக்கர்கள் செப்டம்பர் 28 அன்று காலை சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியத்தின்  "பத்து லட்சம் மரங்கள் இயக்கத்தில்" பங்கேற்பதன் ஒரு பகுதியாக மரங்களை நட்டனர்.

சிங்கப்பூரின் பத்து லட்சம் மரங்கள் இயக்கம் மற்றும் படைப்பின் காலம் 2022 ஆகியவற்றுடன் இணைந்து பங்கின் பசுமை இயக்கத்தின் முன்முயற்சியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

பத்து லட்சம் மரங்கள் இயக்கம்" என்பது மார்ச் 2020 இல் தொடங்கி 2030 இல் முடிவடையும். பத்து ஆண்டுகளுக்குள் நகர-மாநிலம் முழுவதும் பத்து லட்சம் மரங்கள் நடும் திட்டமாகும்.

வனவிலங்குகள் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை

மேம்படுத்துவதற்காகவும் நாட்டின் இயற்கையை மீட்டெடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030ன் நிலையான வளர்ச்சிக்கான ஐந்து தூண்களில் ஒன்றான "இயற்கையில் ஒரு மாநகர் " இந்த இயக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

"இயற்கையில் ஒரு மாநகர் " என்ற பார்வை மறைந்த பிரதமர் லீ குவான் யூவின் "சிங்கப்பூர் ஒரு தோட்ட நகரம்" என்ற பார்வையில் வேரூன்றியது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 50 பூர்வீக வகை மரங்களை பங்குமக்கள் நட்டனர்.

Add new comment

10 + 5 =