மணிலா பேராயலத்தின் வைரவிழா கொண்டாட்டம்


மணிலா பேராலயம் மீண்டும் கட்டப்பட்ட 60வது ஆண்டு நிறைவை, ஜப்பானின் கர்தினால் தலைமையில் கொண்டாடப்பட்டுள்ளது.  

 

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க படைப்பிரிவுகளால் இந்த பேராயலம் அழிக்கப்பட்டது.

 

இந்த கொண்டாட்ட நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கர்தினால் தாமஸ் அக்குயினாஸ் மான்யோ மெயடோ, ஜப்பானும், பிலிப்பீன்ஸூம் வலிமையான உறவுகளை தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

கடவுளின் நற்செய்தி நாம் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்று இந்த ஆண்டு திருத்த்நதை பிரானசிஸால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஜப்பானிய இந்த மதகுரு கூறியுள்ளார்.

 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிந்துவிட்ட இரு நாடுகளுக்கு இடையில் ஒப்புரவையும், அமைதியையும் கொண்டு வரும் நோக்கத்தை திருத்தந்தையின் பிரதிநிதியாக இந்த கர்தினால் இந்த முக்கிய தருணத்தில் கலந்து கொள்வது சுட்டிக்காட்டுகிறது.   

Add new comment

8 + 4 =