கிறிஸ்மஸ் காட்சியில் இயேசு பிறப்பை காட்சிப்படுத்துவதை தடுக்கம் வணிக மையம்


கிறிஸ்மஸ் தொ்டர்பான காட்சிப்படுத்துதலில், இயேசு பிறந்ததை காட்சிப்படுத்துவதை சேர்க்கக்கூடாது என்று வணிக மையம் ஒன்று எடுத்துள்ள முடிவை ஸ்காட்லாந்திலுள்ள கத்தோலிக்கர்களும், சீர்திருத்த சபையினரும் விமர்சித்துள்ளனர்.

 

இந்த ஆண்டு நடைபெறும் கிறிஸ்து பிறப்பு விழா காட்சிப்படுத்துதலில், இயேசுவின் பிறப்பை காட்சிப்படுத்த போவதில்லை என்று எடின்பர்க்கின் வட மேற்கில் 40 மைல் தொலைவிலுள்ள ஸ்டெர்லிங்கில் அமைந்திருக்கும் திஸ்லெஸ்ட் வணிக மையம் தெரிவித்துள்ளது.

 

மதத்தில் இணைந்திருப்பதை பற்றி பெருமைபடும்போது, அரசியல் ரீதியாக நடுநிலைமையாக இருக்க விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

 

கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடவுள்ள வேளையில், மதங்களை கடந்து, பிரிட்டிஷ் தீவுகளிலுள்ள அனைவருமே கிறிஸ்மஸ் குடிலை பார்த்து மகிழ்ச்சியடைவர் என்று புனித ஆன்ட்ரூஸ் மற்றும் எரிடின்பர்க் உயர் மறைமாவட்டத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

இந்த முடிவை மீளாய்வு செய்ய வேண்டுமென அவர்களை கேட்டுக்கொள்ள போவதாகவும் அவர் கூறியு்ளளார்.

 

இவ்வாறு செய்தால், கிறிஸ்மஸ் விழாவின் உண்மையான பொருள் இருக்காது. இந்த முடிவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஸ்காட்லாந்து திருச்சபை கூறியுள்ளது.

 

வணிகம் செய்வதற்காக மட்டுமே இந்த வணிக மையம் நிகழ்ச்சிகளை நடத்துமானால் அது கவலை அளிப்பதாகவே இருக்கும் என்று இது கூறியுள்ளது.  

Add new comment

5 + 0 =