பிரேசில் பேராலயத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி


பிரேசிலில் காம்பினாஸிலுள்ள அமலோற்பவ மரியன்னை பேராலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவர் குறைந்தது 4 பேரை சுட்டு கொன்றதோடு, தன்னையும் சுட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

 

டிசபம்பர் 11ம் தேதி நண்பகல் திருப்பிலி நிறைவடையும்போது பேராலயத்தில் நுழைத்த இந்த மனிதர், துப்பாக்கியால் சுட தொடங்கியதாக காம்பினாஸ் ராணுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

 

கொல்லப்பட்டோரை தவிர 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிதாரி 2 கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

 

பேராலயத்தின் பீடத்திற்கு முன்னால், தாக்குதல் நடத்தியவர் தன்னையே சுட்டு இறந்தார்.

 

இந்த சம்பவத்திற்கு பின்னர், மதியம் 12.15 மணி திருப்பலியை நிறைவேற்றிய அருட்தந்தை அமுரி தோமாஸ் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளி பதிவில் அனைவரும் செபிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

 

திரு்பபலியின் முடிவடையும் வேளையில் பேராலயத்திற்குள் நுழைந்த இந்த நபர் 4 பேரை சுட்டு கொன்றார் என்று இந்த அருட்தந்தை தெரிவித்திருக்கிறார்.

Add new comment

7 + 5 =