சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சௌதி பத்திரிகையாளர்


டைம்ஸ் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

சௌதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் கசோஜி என்று டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

 

சௌதி இளவரசரின் உத்தரவின் பேரில் ஜமால் கசோஜி கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது

 

சௌதி அரசையும் அதனுடைய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக  விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால்.

 

இவர் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்ய ஆவணங்களைப் பெறுவதற்கு இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்திற்கு சென்றார்.

 

பின்னர் அவர் திரும்பவேயில்லை.

 

ஜமால் கசோஜி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என்றும், இக்கொலையில் சௌதியின் பட்டத்து இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும்  கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி கூறியது.

 

ஆனால், வந்த வேலையை முடித்து விட்டு உடனடியாக போய்விட்டதாக முதலில் தெரிவித்த சௌதி அரேபியா பினன்ர், ஜமால் கசோஜிக்கும் சௌதியைச் சேர்ந்த 15 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இறந்ததாக சௌதி தெரிவித்தது. 

 

ஜமால் கசோஜியை கொலை  செய்ததாக  கைது செய்யப்பட்டுள்ள சௌதியை சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

4 + 1 =