இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்


இந்திய ரிசர்வ வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பொருளாதார விவாகரத்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நாட்டில் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த முக்கிய அதிகாரி சக்திகாந்த தாஸ் என்று கூறப்படுகிறது.

 

2016-ம் ஆண்டு செப்டம்பரில் ரகுராம்ராஜன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் உர்ஜித் பட்டேலுடன் சக்தி காந்ததாஸின் பெயரும் இருந்தது.

 

ஆனால், இறுதியில் உர்ஜித் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

 

பின்னர் 2017 மே மாதம் சக்திகாந்த தாஸ் ஓய்வுப்பெற்ற நிலையில், உர்ஜித் பட்டேல் திடீரென பதவி விலகியுள்ளதால், சக்தி காந்ததாஸை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

 

ஒடிஸாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழக ஐஏஎஸ் அதிகாரி இவர். 1980-ம் ஆண்டு ஐஏஎஸ். பேட்ஜ். தமிழக கேடர் அதிகாரியாக இருந்தார்.

 

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் சக்தி காந்த தாஸ். தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், வணிக வரித்துறைச் செயலாளர், தொழில் துறைச் செயலாளர் என்று பல்வேறு பதவியில் பணிபரிந்தவர்.

 

2008-ம் ஆண்டு மத்திய அரசின் பணிகளை மேற்கொள்ள டெல்லி சென்றார்.

Add new comment

1 + 3 =