போதைப்பொருள் வைத்திருந்ததாக தைவான் அருட்தந்தை இரண்டு முறை கைது


ஆம்ஃபிடமின் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக தைவான் அருட்தந்தை ஒருவர் இரண்டு முறை கைது செயயப்பட்டுள்ளார்.

 

ஃபு ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் புனித ராபர்ட் பெல்லார்மின் இறையியல் துறையின் பேராசிரியர் அருட்தந்தை அகஸ்டின் சாவ் பௌருயே பேதைப்பொருள் எடுப்பதை விட்டுவிடுவதாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு்ளளார்.

 

2017ம் ஆண்டு தைவான் தேசிய திருச்சபைகளின் கவுன்சில் பிரதிநிதிகளோடு திருத்தந்தை பிரான்சிஸை அருட்தந்தை சாவ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

45 வயதான அருட்தந்தை சாவை தைவான் கத்தோலிக்க திருச்சபையின் வளாந்து வரும் நட்சத்திரம் என்றும், திருச்சபையிண் முக்கிய திறனாகவும் சில கத்தோலிக்கர்களால் பார்க்கப்படுபவர் ஆகும்.

Add new comment

4 + 5 =