ஹெச்ஐவிக்கு எதிராக பரப்புரையில் அதிருப்தி தெரிவிக்கும் திமோர்-லெஸ்தே அருட்சகோதரி


ஹெச்ஐவி/எயிட்ஸ் பரவலை சமாளிப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கு அரசையும், திருச்சபையையும் திமோர்-லெஸ்தேயிலுள்ள தூய ஆவி சபையின் அருட்சகோதரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மிகவும் விரைவாக பரவி வருகின்ற இந்த பிரச்சனைக்கு மேலும் செயல்திறன் அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அரசுக்கும், திருச்சபைக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

 

இந்த குற்றச்சாட்டை அரசு விரைவாக மறுத்து அறிக்கை விட்டுள்ளது.

 

திமோர்-லெஸ்தேயில் ஹெச்ஐவி பரவலை தடுக்க அருட்சகோதரி பிரிஸ்கோ டோஸ் சாந்தோஸ் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஹெச்ஐவி/எயிட்ஸ் பரவல் அதிகரித்து வருவதை அரசு மற்றும் திருச்சபை அதிகாரிகள் தலையை மணில் புதை்து வைத்துகொண்டு இந்த நாட்டில் இந்த பிரச்சனையே கிடையாது என்று சொல்வதைபோல இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

வயது வந்தோர் மக்கள்தொகையில், ஒரு சதவீதத்திற்கு குறைவான விகிதத்தில் இந்த பிரச்சனை இருந்து வந்தாலும், இந்த கத்தோலிக்க நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் ஹெச்ஐவி தொற்று உயாந்திருக்கிறது.என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

 

2009ம் ஆண்டு 509 பேருக்கு இந்த தொற்று பரவியிருந்தது. 2018ம் ஆண்டு 831 பேர் பதிவாகியுள்ளனர். இதற்கு இடையில் 103 பேர் இறந்து போயுள்ளார். இங்கு முதல் முறையாக 2003ம் ஆண்டுதான் அந்நாட்டில் ஹெச்ஐவி தொற்று பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தொற்று ஏற்பட்டோர் 25 முதல் 44 வயது வரையானோரில் 60 சதவீதம் பேர் இருக்கின்றனர்.

 

ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் உண்மையில் அதிகமாகவே இருக்கிறது என்று அருட்சகோதரி பிரிஸ்கோ டோஸ் சாந்தோஸ் தெரிவித்துள்ளார்.  

Add new comment

4 + 2 =