கழிவு நீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது – அமெரிக்க விஞ்ஞானி


பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிப்பதாக அமெரிக்க வேளாண் துறை விஞ்ஞானி கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் கோதுமை, சோளம், சோயாபீன்ஸ் ஆகிய உணவுப் பயிர்களின் விளைச்சலுக்கு ஏராளமான பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

இதன் காரணமாக வேளாண் நிலம் பாழாகிறது. விளை நிலங்களில் இருந்து வெளி யேறும் ரசாயன கழிவுநீர், ஏரி, ஆறுகளில் கலந்து நீர்நிலைகளும் மாசடைகின்றன.

 

இதனால், அமெரிக்க அரசின் வேளாண் துறை மூத்த விஞ்ஞானி மேட் மூர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது.

 

இந்த ஆய்வில், பூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அமெரிக்க வேளாண் பண்ணைகளில் இருந்து வெளியேறும் பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் கலந்த கழிவுநீர் ஆறு, ஏரிகளில் கலப்பதால், நீர்நிலைகள் மாசடைவதையும். வேளாண் நிலம் பாழடைவதையும் தடுக்க கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்த்து  2 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

 

நெற்பயிர் வளர்க்கப்பட்ட கால்வாய்களில் 85 சதவீதம் முதல் 97 சதவீதம் வரை ரசாயன கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அமெரிக்க விவசாயிகள், பண்ணைகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்களில் நெற்பயிர்களை வளர்க்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த நெற்பயிரை உணவுக்காகவும் பயன்படுத்தலாம்.

Add new comment

3 + 17 =