அயோத்தியில் ராமர் கோயில் – நாடாளுமன்றத்தில் சட்டமேற்ற கோரிக்கை


அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் 50ஆயிரம் பேர் பங்கு கொண்டனர்.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

 

 

அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் தாமத்தப்படுத்துவதாக இன்றைய (ஞாயிறன்று நடைபெற்ற) கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

சாதுக்கள் மூலமாக குடியரசுத்தலைவரிடம் இது தொடர்பாக மனு அளித்த பின்னர், ஆளுநர்கள் மற்றும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த விஷ்வ இந்து பரிஷத்தை, 3வதாக 'கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Add new comment

4 + 2 =