இந்திய நாணயம் செலுத்தி ஈரானிடம் இருந்து எரிபொருள் வாங்க முடிவு


ஈரானிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை அமெரிக்கா தடுத்து வந்தாலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது.

 

அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 8 நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர, அமெரிக்கா சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

 

ஈரானுடன் செய்திருந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது.

 

ஈரானில் இருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்த வேண்டுமென டிரம்ப் எச்சரித்திருந்தார்.  

 

எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வழங்கப்படும் தொகையை, இந்திய நாணயமான ரூபாயில் செலுத்த இந்தியா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

எரிபொருளுக்கு பாதியளவு பொருட்களை ஏற்றுமதி செய்தும், மீதியை ரூபாயாக இந்தியாவுக்கு செலுத்தவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

 

டாலருக்கு பதிலாக ரூபாயாக செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் இருக்குமென கருதப்படுகிறது.

Add new comment

4 + 9 =