பிரான்சில் 4வது வாரமாக வன்முறை போராட்டம்


பிரான்ஸில் எரிபொருட்களுக்கு போடப்பட்ட கூடுதல் வரி உயர்வை கண்டித்து நான்காவது வாரமாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

 

இந்நிலையில், பிரதமர் எட்வர்ட் பிலீப்பு தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையானதை செய்ய போவதாக தெரிவித்து்ளளார்.

 

பிரான்ஸில் எரிபொருட்களுக்கு கூடுதல் வரி உயர்வுக்கு எதிராகவும், வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவதையும் எதிர்த்து `மஞ்சள் ஜாக்கெட்` என்று அறியப்படும் போராட்டம் நடந்து வருகிறது.

 

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளதால் சுமார் 90 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

பாரீஸ் நகரில் பல வருடங்களாக நடைபெறாத மிக மோசமான போராட்டமாக கருதப்படும் இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

Add new comment

17 + 0 =