இளைஞர் ஆண்டு கொண்டாட்டங்களை தொடங்கிய பிலிப்பீன்ஸ்


இளைஞர்களுக்கான சிறப்பு ஆண்டு கடைபிடிக்கப்படுவதை பிலிப்பீன்ஸ் நாட்டு கத்தோலிக்கர்கள் தொடங்கியுள்ளனர்.

 

இளைஞர்களின் குரல் திருச்சபைக்குள்ளும், வெளியிலும் ஒலிப்பதாக என்ற திருச்சபையின் தலைவர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை முன்னிட்டு இந்த இளைஞர் ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.

 

2019ம் ஆண்டை இளைஞர்களின் ஆண்டாக பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

 

2013ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு நிறைவடையும் புதிய மறைபரப்புக்கான 9 ஆண்டு பயணத்தின் ஒரு பகுதியாகவும், பிலிப்பின்ஸில் கத்தோலிக்கம் வேரூன்ற தொடங்கி 5 நூற்றாண்டுகள் நிறைவை முன்னிட்டும் இளைஞர் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிலிப்பீன்ஸ் இளைஞர் பணி: அன்பு செய்யப்படுதல், பரிசாகுதல், அதிகாரம் பெறுதல் என்ற மையக்கருத்தில் திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று இந்த கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.

 

இளைஞர்கள் மாற்றத்தின் சக்திகள் என்றும், திருச்சபையையும், சமூகத்தையும் புதுப்பிக்கக்கூடியவா்கள் என்றும் கத்தோலிக்க ஆயர்கள் அனுப்பியுள்ள மேய்ப்புப்பணி கடிதத்தில் எழுதியுள்ளனர்.

 

நம்முள் இருக்கின்ற ஆட்டு இடையர்கள் தன்மையை தட்டி எழுப்புவோம் என்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பேரவையின் தலைவர் டாவாவ் உயர் மறைமாவட்ட பேராயர் ரோமுலோ வல்லஸ் தெரிவித்து்ளளார்.

 

இறைநம்பிக்கை, நம்பிக்கை, திருச்சபையிலுள்ள அனைவர் மீதும் அன்பு ஆகிய மதிப்பீடுகளை கொளுந்துவிட்டு எரிய செய்து, அனைவரும் இணைந்து பயணித்து மறைபணி செய்வோம் என்று இந்த பேராயர் இளைஞர்களை வலியுறுத்தியு்ளளார்.

Add new comment

5 + 12 =