கிறிஸ்தவ தலித்துக்களின் உரிமைகள் கோரி ட்ரம் அடித்து போராட்டம்


ட்ரம்களை அடித்துகொண்டு ஏழை சமூக பின்னணியை கொண்ட தலித் மக்கள் சுமார் 300 பேர் இந்தியாவின் தலைநகர் டெல்லியின் தெருக்களில் பேரணியாக சென்றனர்.

 

அனைவருக்கும் கிடைக்கின்ற அரசின் சலுகைகள் கிறிஸ்தவ இறைநம்பிக்கையை கொண்டிருப்பதால், மறுக்கப்படாமல், தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை புதியதொரு முறையில் ட்ரம் அடித்து பேரணியாக சென்று கோரிக்கை வைத்துள்ளனர் இந்த ஏழை தலித் மக்கள்.

 

இதன் மூலம் இந்து மதத்தை சேர்ந்த தலித்துகளுக்கு மட்டும் சமூக பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற 1950ம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரின் ஆணையை, தற்போதைய அரசு திரும்பபெற வேண்டும் என்று ட்ரம், நடனம் மற்றும் ஆர்ப்பாட்டம் என தங்கள் அதிருப்தியை நாடாளுமன்றத்திற்கு அருகில் நிகழ்த்தி காட்டியுள்ளது.

 

 

“அரசுகள் வருகின்றன. போகின்றன. நாங்கள் போலி வாக்குறுதிகளை மட்டுமே பெறுகிறோம். தூங்கி கொண்டிருக்கிற அரசை எழுப்பிவிட இப்பொது ட்ரம் வாசிக்கிறோம்” என்று தமிழ் நாட்டின் புதுச்சேரி மற்றும் கடலூர் உயர் மறைமாவட்டத்தை சேர்ந்த இந்த போராட்டத்தின் ஏற்பாட்டளரான அருட்தந்தை அற்புத ராஜ் தெரிவித்தார்.

 

இந்து மத தலித் மக்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்கு நிதி ஆதரவு, வேலைவாய்ப்பில், கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு என பெற கூடிய சலுகைக்கு, இந்திய அரசியல் சாசனத்தில் சிறப்பு சரத்துக்கள் உள்ளன. ஆனால், கிறிஸ்தவமும், இஸ்லாமும், சாதியற்ற மதங்கள் ஆக இருப்பதால் இந்த சலுகைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மறுக்கப்படடுள்ளன.

 

1950ம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரின் ஆணையில், சிக்கிய மக்களையும், பௌத்த மதத்தினரையும் சேர்ப்பதற்கு இரண்டு முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add new comment

9 + 8 =