குழந்தை காப்பகத்திற்கு புதிய விதிமுறைகள்


குழந்தைகள் காப்பகத்திற்கான விதிமுறைகளை நடுவண் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச கவனிப்பு மற்றும் பாதகாப்பை வழங்கும் வகையில் இந்த விதிமுறைகளை இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

 

தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகங்களைத் தவறாக பயன்படுத்துதல் தொடர்பான வழக்கில், குழந்தைகளுக்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு என்ற சட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. 

 

நடுவண் மற்றும் மாநில அரசுகள், அரசு அல்லது சமூக நல அமைப்புகளால் உருவாக்கப்பட்ட காப்பகங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு குறைந்தபட்ச கவனிப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அது கூறியது.

 

இந்த வழிகாட்டுதல்படி, சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் வராத அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை நடுவண் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

Add new comment

15 + 4 =