ஆதார் விவரங்களை திரும்ப பெற புதிய சட்டமா?


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, நடுவண் அரசு ஆதார் எண் தகவல்களை பல்வேறு செவை திட்டங்களுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டுமென கட்டாயமாக தெரிவித்துவிட்டது.

 

ஆனால், செல்பேசி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் இறுதியில் தீர்ப்பளித்தது.

 

அப்படியானால் ஏற்கெனவே வழங்கிவிட்ட தகவல்களுக்கு என்னவாகும் என்று வினா எழுப்பப்பட்டது.

 

எனவே, ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறுகின்ற வகையில் புதிய சட்டம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நடுவண் அரசால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெறவும், வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெறவும் ஆதார் எண் விவரங்களை கட்டாயப்படுத்தி இணைக்க அரசு மக்களை கட்டாயப்படுத்தியது. 

Add new comment

2 + 1 =