மரண தண்டனையை எதிர்க்க திருத்தலத்தில் விளக்கேற்றிய கொரிய ஆயர்கள்


முன்னதாக மரண தண்டனை வழங்கப்பட பயன்படுத்தப்பட்ட சியோலிலுள்ள மறைசாட்சியர் திருத்தலத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டில் தொடர்ந்து இப்போதும் வழக்கத்திலுள்ள மரண தண்டனைக்கு கத்தோலிக்க சமூகம் எதிர்ப்பு தெரிவிப்பதை குறிப்பிட்டு காட்டுவதற்காக இந்த திருத்தலம் விளக்கேற்றப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கையை தென் கொரிய ஆயர்களின் நீதி மற்றும் அமைதி ஆணையம் முன்முயற்சியோடு செயல்படுத்தியு்ளளது.

 

ஜியோல்டுசான் மறைசாட்சியர் திருத்தலத்தில் விளக்கேற்றப்பட்ட நிகழ்வில் பொது மக்களும், துறவற குழுக்களும் கலந்து கொண்டன.

 

மத திருப்பண்டங்கள் இருக்கின்ற சுவர்களில் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் மஞ்சள், நீலம் மற்றும் பச்சை விளக்கால் ஒளிந்தன.

 

“வாழ்க்கையில் அமைதியை அழிப்பவர் தென் கொரியா, மரண தண்டனை அழிக்கப்பட வேண்டும்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

 

“தலை வெட்டப்படும் மலை” என்று பொருள்படும் இந்த திருத்தலத்தில்தான் தென் கொரிய கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த மரண தண்டனையை ஒழிப்பதற்காக திருச்சபையின் முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும், மக்களிடம் இது பற்றிய விழிப்பணர்வு மிகவும் அரிதாகவே வளர்ந்துள்ளதாக புனித பவுல்  சாட்டர்ஸ் அருட்சகோதரிகள் சபையை சேர்ந்த ஜீன் மார்க் ச்சோ சுங்-அய் தெரிவித்து்ளளார்.

 

இந்த தண்டனை பெறுகின்ற பலரும் அவர்களின் குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்று கொல்லப்பட வேண்டியவாகள் என்றே மக்கள் எண்ணுகிறார்கள். இவர்களில் பலரும் ஏழை குடும்பத்தில் இருந்து வருபவர்களாகவும், அதிகமாக படிப்பறிவு இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

Add new comment

1 + 2 =