வங்கதேச கத்தோலிக்கர்களின் மனிதநேய முயற்சியை புகழும் காதினால் டேக்லெ


வங்கதேசத்தில் வாழும் கத்தோலிக்கர்கள் குறைவுதான். ஆனால், அவர்களின் செயல்பாடுகளும், சேவைகளும் அன்பும், மகத்துவமும் நிறைந்தவை என்று காரிதாஸ் இன்டர்நேஷனல் தலைவர் கர்தினால் லுயிஸ் அன்றனியோ டேக்லெ கூறியுள்ளார்.

 

தெற்காசிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் டேக்லெ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

சிறிய செயல்பாடாக இருந்தாலும் அன்போடு செய்யப்பட்டால் அது சிறிதல்ல. அன்பு இருந்தால் மகத்துவமும் இருக்கும். அன்பு செய்வதை நிறுத்தும்போது வாழ்க்கையும் நினறு விடுகிறது.

 

அன்பு செய்கிற வரை நீங்கள் வாழ்வீர்கள் என்று 61 வயதாகும் மணிலா பேராயரான கர்தினால் டேக்லெ டாக்காவில் கத்தோலிக்கர்களிடம் கூறினார்.

 

2017ம் ஆண்டு இறுதியில் வங்கதேசத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் பயணம் மெற்கொண்ட முதலாண்டு நன்றியறிதல் திருபபலியில் இந்த கருத்துக்களை கர்தினால் டேக்லெ தெரிவித்துள்ளார்.  

Add new comment

12 + 1 =