பிலிப்பீன்ஸ் அருட்தந்தை கொலையில் தாமதமாகும் நீதி


கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிலிப்பீன்ஸின் வட பகுதியிலுள்ள நியுவா இசிஜா மாகாணத்தின் சான் ஜோஸ் மறைமாவட்டத்தில் கொல்லப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தை மாசெலிட்டோ பேஸ் கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் தாமதமாகி வருகிறது.

 

ஓராண்டு நினைவு நாளில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த உள்ளூர் திருச்சபையின் தலைவர்கள் இந்த அருட்தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ஆயர் ரோபர்ட்டோ மல்லாரி கூறியுள்ளார். ஆனால், இந்த கொலை தொடர்பான விசாரணையை தொட வேண்டுமென அவர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

 

தலைநகர் மணிலாவில் இருந்து 176 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற நகரான சான் லியோனார்டோவில் வாகனம் ஓட்டி சென்ற 72 வயதான அருட்தந்தை மாசெலிட்டோ பேஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

 

சான் ஜோஸ் மறைமாவட்டத்தின் பிலிப்பீன்ஸின் ஊரக மறைபரப்பாளாகள் அமைப்பின் தேசிய வாரிய உறுப்பினாகளில் ஒருவராக மாசெலிட்டோ பேஸ் செயல்பட்டு வந்தார்.

 

இது விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக பணிபுரிகின்ற அருட்தந்தையர் மற்றும் பொது மக்கள் அடங்கிய பல சபைகள் இடம்பெறும் அமைப்பாகும்.

Add new comment

2 + 0 =