Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக சிறுநீரக தினம் | march 10
உலக சிறுநீரக தினம்
உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சிறுநீரக மாற்றுக்காகக் காத்திருக்கும் நோயாளிகள் ஆண்டுக்கு 2 இலட்சம் பேர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரகங்கள், இரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்களை பிரித்தெடுக்கும் வேலைகளை செய்கின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகின்றன. நாளொன்றுக்கு சுமார் 400 முறைக்கும் மேல் இந்த வேலையை சிறுநீரகங்கள் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் அதிக இரத்த அழுத்தம், நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளிட்ட காரணங்களால் செயலிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
சிறுநீரகங்களின் மீது அக்கறை கொண்டவர்கள் அவ்வப்போது சர்க்கரை அளவு, உடல் எடை, இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிறுநீரகம் செயலிழந்து விட்டால் செயற்கை முறையில் உடலில் இருந்து சிறுநீர் பிரித்து எடுக்கப்படுகிறது.
Add new comment