பிரெக்ஸிட் பற்றி அயர்லாந்து ஆயர்கள் கலந்துரையாடல்


பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தங்களின் கருத்துக்களை கவனமுடன் கேட்டு மதிப்பளிக்க வேண்டும் என்று அயாலாந்திலுள்ள திருச்சபை தலைவர்கள் அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளனர்.

 

பிரெக்ஸிட்டால் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என கடந்த வாரம் கத்தோலிக்க, மெத்தோடிஸ்ட், அயர்லாந்து திருச்சபை, பிரெஸ்பிற்றோரியம் திருச்சபைகள் அனைத்தும் பெல்ஃபாஸ்டில் கூடி விவாதித்துள்ளன.

 

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்தோர் மற்றும் சேர்ந்தே இருக்க வாக்களித்தோர் அனைவரின் சட்டபூர்வ அபிலாஷைகளையும் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமானது என்று இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

பொது நலன்களுக்காக சேர்ந்து பணியாற்றிய உறவுகளையும், பரஸ்பர புரிதலையும் பிரெக்ஸிட் பதற்றம் அகற்றிவிட கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

அயாலாந்து மக்களுக்கும், வடக்கு மற்றும் தெற்கு, அயாலாந்து குடியரசுக்கும், ஐக்கிய ராஜ்ஜியத்திற்கும் இடையிலான உறவுகள் கடந்த 30 ஆண்டுகளாக மேம்பட்டு, ஆழமாகியுள்ளதாகவும் அவர்கள் பராட்டியுள்ளனர்.

Add new comment

1 + 3 =