இஸ்ரேலில் வீட்டில் தங்க புதையல் கண்டெடுப்பு


இஸ்ரேலின் சீசெரா நகரில் உள்ள ஒரு வீட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

 

கிறிஸ்துவ பைஜென்டைன் சாம்ராஜ்யம் மற்றும் முஸ்லிம் பேட்மிட் காலிபேட் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் இது புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 

இரண்டு கற்களுக்கு இடையே மறைந்திருந்த இந்த புதையல் வெண்கல பாத்திரம் ஒன்றில் இருந்தது. அதில் 24 தங்க நாணயங்களும், ஒரு காதணியும் இருந்தன.

 

பைஜென்டைன் சாம்ராஜ்ய அரசர்கள் மூன்றாம் ரொமானோஸ், ஏழாம் மிக்கேல் டக்ளஸ் ஆகியோரின் உருவங்கள் பொறித்த நாணயங்கள் இந்தப் புதையலில் உள்ளன.

Add new comment

9 + 3 =