பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேறும் கத்தார்


பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலக போவதாக கத்தார் தெரிவித்திருக்கிறது.

 

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

 

எனவே, பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வாய்ப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

 

நாளொன்று உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்தால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்க செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

ஆனால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

 

இயற்கை எரிவாயு உற்பத்திக்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த போவதாக கத்தார் கூறியுள்ளது.

Add new comment

14 + 1 =