சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தை பிரானசிஸ் தொடங்கி வைத்த செபம்


ஆயிரக்கணக்கான திருயாத்திரிகர்களை செபத்தில் வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் அமைதி நிலவ இறந்துபோன மக்களை நினைவுகூரும் வகையில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றி, போரில் இறந்த சிரியா மக்களை குறிப்பாக எட்டு ஆண்டுகால போரில் இறந்த மாசற்ற குழந்தைகளுக்காக செபித்துள்ளார்.

 

இந்த மெழுகுதிரியின் தீக்கொளுந்து போரினால் உண்டாகியிருக்கும் இருளை போக்குவதாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செபத்திற்கு பின்னர் தெரிவித்திருக்கிறார்.

 

திருத்தந்தை இந்த மொழுகுதிரியை ஏற்றி வைத்த நிகழ்வு சிரியா மக்கள் மீது கவனம் செலுத்துகின்ற திருச்சபையின் தேவையில் ஊழல்வோருக்கான உதவி நிறுவனத்தின் கிறிஸ்மஸ் பரப்புரையாகும்.

 

இந்த விழிப்புணர்வு நிகழ்வு திருத்தந்தை மெழுகுதிரி ஏற்றி வைத்திருப்பதோடு அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.

 

சிரியாவிலுள்ள டமாஸ்கஸ், ஹோம்ஸ், மார்மாரிடா,அலெப்போ, ஹாஸ்சேக், தார்டுயஸ் மற்றும் லடாகியா நகரங்களிலுள்ள சுமார் 50 ஆயிரம் குழந்தைகள் அமைதிக்கான மெழுகுதிரிகளை ஏற்றியுள்ளதாக திருச்சபையின் தேவையில் உழல்வோருக்கான உதவி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

 

15 மில்லியன் யூரோ அவசரகால நிதி உதவி வழங்கிட திருச்சபையின் தேவையில் உழல்வோருக்கான உதவி நிறுவனம் திட்டமிட்டு்ளளது.

Add new comment

4 + 10 =