துன்புறுகின்ற, காயப்பட்ட உலகிற்கு கிறிஸ்தவ ஒன்றிப்பே நம்பிக்கை - திருத்தந்தை


துன்புறுகின்ற, காயப்பட்ட உலகிற்கு கிறிஸ்தவ ஒன்றிப்புதான் நிகழ்கால நம்பிக்கையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வேற்றுமைகள் இருந்தாலும், அமைதிக்காகவும், மனித மாண்புக்காகவும், படைப்பை பராமரிப்பதற்கும் இணைந்து பணிபுரிவதற்கான உலகின் நம்பிக்கையாக இந்த இரு சமூகங்களின் ஒன்றிப்பு இருக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

புனித ஆன்ட்ரூவின் பெயர் கொண்ட திருவிழாவின்போது, இந்த புனிதரை பாதுகாவலராக கொண்டு துருக்கியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்த்தோடாக்ஸ் கான்ஸ்டானடிநோபிள் முதுபெரும் தந்தை பர்த்தோமேலுவுக்கு அனுப்பிய செய்தியில் திருத்தந்தை இந்த செய்தியை தெரிவித்திருக்கிறார்.

 

திருச்சபையின் ஒன்றிப்பை வளர்க்கும் நோக்கத்துடன் திருத்தந்தையின் இந்த செய்தியை இஸ்தானிலுள்ள முதுபெரும் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில்  வத்திக்கானின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பாப்பிறை  கவுன்சிலின் தலைவர் காதினால் குர்ட் வாசித்துள்ளார்.

Add new comment

5 + 1 =