கொரியர்களின் அமைதி திருயாத்திரைக்கு பின் இளைஞர்களை புகழ்ந்த திருத்தந்தை


கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ செய்யும் பணிகளுக்காக சியோல் உயர் மறைமாவட்ட கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங்-கிற்கு திருத்தந்தை நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

இளம் திருயாத்திகர்கள் அமைதியை உருவாக்குபவர்களாக மாற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

 

திருத்தந்தையின் சார்பாக வத்திக்கான் உள்துறை செயலாளர் கர்தினால் பியேட்ரோ பரோவினும், வத்திக்கான் செயலக பொது விவகார பதிலாள் பென்னா பார்ராவுனம் காதினால் யோமுக்கும் இளம் திருயாத்திரிகர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

வட மற்றும் தென் கொரியாக்களுக்கு இடையில் ராணுவமற்ற மண்டலத்தில் புணித யாத்திரை மேற்கொள்ள 2018 அமைதி காற்று திருயாத்திரையில் இணைந்து கொண்டு அமைதிக்காக உழைக்கின்ற பணியார்களாக உருவாகும் ஆசையை 100 இளைஞர் திருயாத்திரிகர்கள் திருத்தந்தை பிரான்சிஸூக்கு எழுதி தெரிவித்திருந்தனர்.

 

இந்த 100 இளைஞர் திருயாத்திரிகர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸின் பதில் கடிதமாக வத்திக்கானின் இந்த கடிதம் அமைந்துள்ளது.

 

இந்த இளைஞர்கள் எழுதிய கடிதத்தை கர்தினால் யோம் திருத்தந்தையிடம் வழங்கியிருந்தார்.

 

“அமைதி காறறு” என்ற முயற்சி சியோல் உயர் மறைமாவட்டத்தால் நடத்தப்பட்டு, தென் கொரிய கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகமும், கொரிய ஒன்றிப்பு அமைச்சகமும் புலவராக நிதி ஆதரவு அளித்தும் 2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  

Add new comment

12 + 0 =