இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் பதவியேற்பு


இந்தியாவின் புதிய தலைமை தோ்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றுள்ளார்.

 

தலைமை தோ்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பா் 1ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், சுனில் அரோராவை குயடிரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

 

2019ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் மக்களவைத் தோ்தல் சுனில் அரோராவின் தலைமையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தகவல் தொலைத்தொடா்புத் துறை செயலாளராக பொறுப்பு வகித்த அரோரா தற்போது தலைமை தோ்தல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.

Add new comment

9 + 9 =