இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர்


2019ம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரம்போசாவை சிறப்பு விருந்திராக பங்கேற்பார் என்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்க அதிபரை சந்தித்த மோடி 2019ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக வருகைதர அழைப்பு விடுத்தார்.

 

அர்ஜெண்டினாவின் பர்னஸ் அயர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது.

 

இந்த மாநாட்டின்போது தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி மோடி ஆலோசித்தார்.

 

காந்திக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் உள்ள நெருக்கம் தென் ஆப்பிரிக்க அதிபரை இந்த விழாவுக்கு அழைத்திருப்பதாக மோடி  குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

2 + 15 =