இந்தியா நடத்தும் ஜி20 நாடுகள் குழு கூட்டம்


2021ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2022ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் குழுவின் மாநாட்டை இந்தியா நடத்தும் என இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

அர்ஜெண்டினாவின் தலைநகர் பர்னஸ் அயர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற்றது.

 

இந்தக் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய மோடி இதனை அறிவித்தார்.

 

2022ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு என்பதால் 2021ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2022ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்து அனுமதி கோரியதாக அவர் கூறியுள்ளார்.

 

இந்த உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை மோடி சந்தித்தார். மேலும், அமெரிக்கா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பிலும் மோடி கலந்து கொண்டார்.

Add new comment

7 + 7 =