இறுதி நாளுக்கு தயார் செய்ய வலியுறுத்தும் திருத்தந்தை


இறுதி நாளை பற்றி சிந்தித்து, நமது வாழ்க்கையை பரிசீலனை செய்கிறபோது கடவுள் என்ன கண்டறிவார் என்று எண்ணிப்பார்ப்பது நல்லதாக இருக்கும் என்று திருத்த்நதை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

கடவுள் என்னை இன்று அழைத்தால் நான் என்ன செய்வேன்? என்ன சொல்வேன்? என்ன அறுவடையை நான் அவரிடம் கூறுவேன் என்று டோமுஸ் சாந்தா மரியா தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

இந்த திருப்பலியில் திருவெளிப்பாடு நூலில் இருந்து வாசிக்கப்பட்ட வசனங்களில் கடவுளும், அவரின் தூதர்களும் கூரிய அரிவாள்களை கொண்டு அறுவடை செய்வார்கள் என்பதை விளக்கியபோது, திருத்தந்தை பிரானசிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

 

திருவழிப்பாட்டு ஆண்டு முடியும் நிலையில், உலக முடிவு பற்றிய வாசகங்கள் திருப்பலியில் வாசிக்கப்படுகின்றன.

 

மக்கள் தங்களின் வாழ்க்கையை பரிசீலனை செய்து, தங்களின் இறுதி நேரம் வருகின்றபோது கடவுளிடம் இருந்து என்ன தீர்ப்பை பெறுவார்கள் என்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

 

நாம், குறிப்பாக இளைஞர்களாக இருக்கின்றபோது, இறுதி நாளை பற்றி சிந்திப்பதை எண்ணுவதே கிடையாது. அதனை ஒதுக்கி வைத்துவிடுகிறோம். ஆனால் யாருடைய வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கிடையாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையில் கூறியுள்ளார்.

Add new comment

4 + 3 =