புனித கொலும்பன் சபையின் நூற்றாண்டு கொண்டாட்டம்


புனித கொலும்பன் மறைபரப்பு சபையின் நூற்றாண்டை தென் கொரிய கத்தோலிக்க திருச்சபை கொண்டாடியுள்ளது.

 

சியோல் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால் ஆன்ட்ரூ யேயோம் சூ-ஜூங் தலைமையில் சியோலிலுள்ள மேயோங்தெங் பேராலயத்தில் நன்றியறிதல் திருப்பலி நடைபெற்றது.

 

கொரியாவின் பாப்பிறை தூதர் உள்பட துணை ஆயர்கள், புனித கொலும்பன் மறைபரப்பு சபையை சேர்ந்த அருட்தந்தையர் பலரும், சுமார் ஆயிரம் இறை மக்களும் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர்.

 

இந்த திரு்பபலியில் சொசைட்டியின் சாசனத்தையும், இந்த சொசைட்டியை நிறுவிய ஆயர் எட்வர்ட் கால்வின் மற்றும் அருட்தந்தை ஜான் பிலோவிக் ஆகியோரின் படத்தையும் புனித கொலும்பன் மறைபரப்பாளர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

 

சீனாவின் கம்யூனிஸ்ட் பரவலாகி, சிக்கல்கள் அதிகமாகி கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் ஆபத்தில் இருந்தபோது, 1927ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயர் கால்வின் எழுதிய கடிதத்ததை நடிகை ஷோபியா கிம் சாங்-ஹூயுன் வாசித்தார்.

 

அதில், திருச்சபையின் தலைவராக ஆழமான இறைநம்பிக்கையும், தைரியமும், தீர்க்கமான முடிவும் கொண்டு அவர் செயல்படுவதற்கு ஆயர் கால்வின் சாட்சியம் பகர்ந்திருந்தார்.

 

“என்ன நடந்தாலும் பரவாயில்லை. கடவுளின் மக்களை நாம் கைவிட்டுவிட முடியாது. கடவுள் நம்மிடம் ஒப்படைந்துள்ள மக்களோடு இணைந்திருப்போம். கடவுளுக்கு சித்தமானால், நாம் இங்கேயே இறப்போம். நமது தியாகம் இறைமக்களுக்கு தைரியத்தை வழங்கும் என்று ஆயர் கால்வின் இந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

Add new comment

7 + 4 =